பல்கலைக்கழகங்களில்
ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு இணையான எண்ணிக்கையிலானவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இனிமேல் முறையற்ற வகையிலான அல்லது தற்காலிக அடிப்படையிலான அரச நியமனங்கள் வழங்கப்பட
மாட்டாது எனக் குறிப்பிட்டார்.
மேலும்,
தகைமைகள் மற்றும் திறமை அடிப்படையில் தகுதியான நபர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதே
அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும், இதற்குப் பொது முகாமைத்துவக் குழுவின்
(Public Management Committee) அனுமதி
பெறப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆதாரங்கள் (Evidence)
1. Sri Lanka Parliament – Official Website
2. Newsfirst
0 Comments